சுருக்கம்

சங்க இலக்கியம் ஐந்திணைகளாக நிலத்தை வகுத்து, ஒவ்வொரு நிலத்தின் இயற்கை, தொழில், மாந்தர், உணர்வு ஆகியவற்றை ஒரு முறையான கட்டமைப்புக்குள் வைத்துப் பாடுகிறது. அவற்றுள் மருதம் ஆற்றுப்பாசன வேளாண்மை நிலத்தையும் அதனோடு இணைந்த ஊர் வாழ்க்கையையும் சித்திரிக்கிறது. சங்கப் புலவர்கள் தகவல் தொழில்நுட்பம் என்ற கருத்தை அறியாதவர்கள்; ஆயினும் மருதத் திணையின் அறிவு வகைப்பாடு, தூதுவர் வழியான செய்திப் பரிமாற்றம், நீர்ப்பகிர்வு அறிவு, வாய்மொழி–ஓலை–அச்சு–எண்மிய ஊடகப் பயணம் ஆகியவை இன்றைய தகவல் அமைப்புகளோடு ஒப்பிடத்தக்க கருத்துகளைக் கொண்டுள்ளன. இக்கட்டுரை அவ்வொப்புமைகளை வரலாற்று எல்லைக்குள் நின்று ஆராய்ந்து, இன்றைய மருத நில வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளையும் சவால்களையும் விளக்குகிறது. சங்க இலக்கியம் தொழில்நுட்பத்தை முன்கணித்தது என்பதல்ல் அது அறிவை ஒழுங்குபடுத்தும் ஆழ்ந்த மரபைக் கொண்டிருந்தது என்பதே முடிவு.

மேற்கோள்கள்

5 references
  1. மாணிக்கவாசகன்.ஞா, தொல்காப்பியம் மூலமும் விளக்க உரையும், உமா பதிப்பகம், மண்ணடிஈ சென்னனை- 01, பதிப்பு-2010.
  2. துரைசாமிப்பிள்ளை, ஔவை சு., புறநானூறு, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008.
  3. சோமசுந்தரனார்.பொ.வே, பட்டினப்பாலை, பத்துப்பாட்டு பகுதி-2, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008.
  4. மதுரைத் திட்டம், எண்மிய நூலகத் தளங்கள், ஆண்டு-1998.
  5. தமிழ்நாடு அரசு வேளாண்மை–உழவர் நலத் துறை – ‘உழவன்’ செயலி தொடர்பான அதிகாரப்பூர்வ வெளியீடுகள்.

மேற்கோள் காட்டுவது எப்படி

சங்க இலக்கிய மருதநிலமும் தகவல் தொழில்நுட்பமும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 38-44. https://doi.org/10.63300/3vpkx388

ஒத்த கட்டுரைகள்

191-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.