- Section
- Articles
- Published
- Pages
- 48-56
Abstract · தமிழ்
சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சமூக அமைப்பையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதற்கான முதன்மையான இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றுள் புறநானூறு தமிழரின் புறவாழ்வை விரிவாகப் பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க நூலாகும். அரசியல், போர், வீரம், கொடை, விருந்தோம்பல், நட்பு, உறவு, உணவு, உடை, அணிகலன், கலை, இசை, புலவர் மரபு, சமூக உறவுகள், பெண்களின் பங்களிப்பு, ஈகை, மானம், புகழ் போன்ற பல்வேறு கூறுகள் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெறுகின்றன. எனவே, புறநானூறு ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமன்றி, பழந்தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையை அறிய உதவும் சமூக வரலாற்று ஆவணமாகவும் விளங்குகிறது.
புறநானூற்றில் வெளிப்படும் விருந்தோம்பல், ஈகை, உணவுப் பண்பாடு, உடை மற்றும் அணிகலன், கலை மற்றும் இசை, புலவர் பண்பாடு, வீரப் பண்பாடு, பெண்களின் பண்பாட்டு நிலை, நட்பு மற்றும் உறவுமுறை, சமூக ஒற்றுமை, மனிதநேயம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆகிய பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இவற்றின் வழியாகப் பழந்தமிழர் வாழ்வியலில் நிலவிய பண்பாட்டு நெறிகள் எவ்வாறு சமூக ஒழுங்கையும் மனித உறவுகளையும் பேணின என்பதும் விளக்கப்படுகிறது.
References
- துரைச்சாமிப்பிள்ளை , சு.ஒளவை (உ.ஆ) - புறநானூறு மூலமும் உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிட்., 522.டி.டி.கே.சாலை, ஆள்வார்பேட்டை, சென்னை -18.
