சுருக்கம்
தொல்காப்பியத்தில் தகவல் தொடர்பியல் என்னும் இக்கட்டுரை, தொல்காப்பியத்தின் வழியாகப் பண்டைத் தமிழர்களின் தகவல் தொடர்பு முறைகளை ஆய்வு செய்கிறது. நவீனத் தகவல் தொடர்பியலுக்கு அடிப்படையாக விளங்கும் கருத்துகள் தொல்காப்பியத்தில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். மெய்ப்பாடு, மடலேறல், அகப்பொருள் மற்றும் புறப்பொருள், இறைச்சி, தூது, பறவை நிமித்தம், முரசு, பூக்கள் ஆகிய கூறுகள் தகவல் தொடர்பு ஊடகங்களாகச் செயல்பட்ட விதம் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. மெய்ப்பாடு உடல்மொழி வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவதையும், மடலேறல் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் தகவல் பரிமாற்ற முறையாக விளங்கியதையும் விளக்குகிறது. இறைச்சி,உள்ளுறை மறைமுகமாகச் செய்திகளை உணர்த்தும் உத்தியாகவும், தூது தனிமனித உறவுகளையும் சமூக உறவுகளையும் பேணும் முறையாகவும் அமைந்துள்ளன. பறவை நிமித்தம் இயற்கையின் வழியாகத் தகவல்களை அறியும் முறையையும், முரசு அரசின் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாகவும், பூக்கள் போரின் தன்மையை அடையாளப்படுத்தும் குறியீடுகளாகவும் விளங்கியுள்ளன. இவ்வாறு தொல்காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு தகவல் பரிமாற்றக் கூறுகளை ஆராய்வதன் மூலம், பண்டைத் தமிழர்கள் மொழி, உடல்மொழி, குறியீடு, இயற்கை மற்றும் சமூக மரபுகள் ஆகியவற்றின் வழியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொண்ட நுட்பத்தையும், அவர்களின் வாழ்வியல் மற்றும் அறநெறிச் சிந்தனைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
2 references- ந.சுப்புரெட்டியார் , அகத்திணைக் கொள்கைகள் பக் .116 – 117
- சு.வெங்கடேசன், வைகை நதி நாகரீகம், ப.68