தொல் தமிழ்க் குறவர் பழங்குடியினரின் உன்னதமான பண்பாட்டு, ஆன்மிக வரலாறும் அவர்க்கு இழைக்கப் பட்ட பிற்காலத்திய அநீதிகளும்

குறவர் இனம் குறித்து முழுமையாக எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. குறவர் யார் ? யார் என்பதற்கு முன், யார் இல்லை என்பதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரிய வாகிரி போலி மொழி பேசிக் கொண்டு, ஊசிமணி, பாசிமணி விற்கும் நரிக்குறவர் என அழைத்துக் கொள்ளும் குருவிக்காரர்கள் வேறு, தொல் தமிழ்க் குறவர் வேறு. ஒரு காலத்தில் இலங்கை தாண்டி நீண்டிருந்த தென்னிந்திய மலைகளில் ( இந்தியா, இலங்கை இரண்டும் ஒரே நிலமாக இருந்த காலகட்டத்தில்…

குருக்கள்பட்டி கிராமச் சிறுதெய்வ வழிபாடும் பண்பாட்டு வரலாறும்

தமிழக நாட்டார் வழக்காற்றியலில் சிறுதெய்வ வழிபாடு மிக முக்கியப் பண்பாட்டு இடத்தைப் பெறுகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து மாறுபட்டு, மக்களது அன்றாட வாழ்க்கை, எல்லைக் காவல் தேவை, முன்னோர் வழிபாடு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளோடு பிணைந்து இச்சிறுதெய்வங்கள் இயங்குகின்றன. குருக்கள்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களப்பணித் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்ட படைப்புகள் – பாண்டிய நாட்டு திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோவில்

தென் மாவட்ட படைப்புகள் – பாண்டிய நாட்டு திருத்தலங்கள் ஆக இருக்கக்கூடிய கோவில்களில் குறிப்பாக பன்னிரு திருமுறையில் பாடப்பட்ட தேவார பாடலில் இடம் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோவில் உடைய சிறப்பு பற்றி ஆராய்வதாக இந்த கட்டுரை அமைகிறது மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் உடைய அமைப்பு அதற்குரிய பெருமைகள் பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது .

சுசீந்திரம் ஸ்ரீ முன்னூற்றிநங்கை அம்மன் கோவிலின் அமைப்பும் அருள்ச்சிறப்பும்

உலகின் ஆதி இனம் தமிழ் இனம். ஆலயங்கள் நிறைந்த பகுதி தமிழகமே. ஆன்மிகத்திற்கு அடிப்படையாக அமைவதும், பெரியோர்கள் தோன்றியதும் சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், வாழ்ந்த நாடு தமிழ்நாடு, அத்தகைய தனி சிறப்பு மிகுந்த தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிழக்கு முகமாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சுசீந்திரம் ஸ்ரீ முன்உதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது, அம்மனின் அருள் தன்மை,சிறப்பையும் இவ்வாய்வில் விரிவாக காணலாம்

நாட்டுப்புற பழமொழிகளில் வாழ்வியல் விழுமியங்கள்

மக்களின் அன்றாட வாழ்வியலுக்கிடையே நிகழும் நிகழ்வுகளில் அரிதாகவும், புதிதாகவும், வியப்பாகவும், நிகழ்ச்சிகளைக் காண நேரிடுகையில், அந்நிகழ்ச்சியைப் பற்றி கூறுகையில் பழமொழி தோற்றம் பெறுகிறது. மேலும் வாழ்க்கையில் அனுபவப் பாடங்களாகப் பெற்ற கருத்துக்களும் பழமொழிகளாக உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் நாட்டுப்புறவியலில் பழமொழிகளோடு தொடர்புள்ள வாழ்வியல் விழுமியங்கள் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி)

கல்வெட்டுகளில் ‘வரிவிதிப்பு’ என்பது, கடமை, இறை, அந்தராயம் (சிறு வரிகள்) என்று கூறப்படுகிறது. இவ்வரிவிதிப்பு அரசாங்க வருவாய்க்கான சுங்கக் கருவியாகப் பார்க்கப்படவில்லை, குடிகளின் நுகர்வுத் திறன் உற்பத்தியைப் பாதிக்காத வண்ணம் சமூக அற விழுமியங்களோடு பிணைக்கப்பட்ட ஓர் உயர் அறப்பண்பாட்டின் நிதிசார் பண்பாடாகக் கடமை (வரிகள்) இயங்கியதைக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகின்றது. விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் நிலையான வருவாயாக வரிகள் (கடமை) காணப்படாமல் நிலத்தின் விளைச்சலுக்கும் தன்மைக்கும் (கரிசல் நிலம்) ஏற்ப வரி செலுத்தியதை அறியமுடிகிறது. ஒரு…

தென்மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளில் தாது வருட பஞ்சம்

தென்மாவட்டப்பகுதிகள் பழமையான பாண்டிநாட்டுப் பகுதியாக போற்றப்படுவனவாகும். அவற்றில் நெல்லை வட்டாரப்பகுதிகளில் பழங்காலந்தொட்டே இலக்கிய ஆளுமைகள் தோன்றி தமிழுக்கு தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வகையில் தமிழக வரலாற்று எழுதியலில் மறுக்க முடியாத நிலப்பகுதியாகவும் அமைந்த இப்பகுதி தென்னிந்திய நிலப்பகுதி முழுமையும் நிலவியிருந்த தாது வருட பஞ்சம் பற்றிய பாடுபொருளைக் கொண்டு இலக்கியம் படைத்த புகழுக்கும் உரியதாகும். அவ்வகையில் தாது வருடப்பஞ்சத்தை சுட்டும் சிற்றிலக்கியங்களான பஞ்சலட்சண திருமுக விலாசம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி எனும் இரு நூல்களில் அறியலாகும் வறட்சிப்பற்றிய குறிப்புகளை…

புதியமாதவியின் ‘ரசூலின் மனைவியாகிய நான்’ நாவலில் பெண் உளச் சிக்கல்கள்

ஜூலை, 2008 – குஜராத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையும், அந்தக் குண்டுவெடிப்பில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களின் அவலநிலையினையும், அவர்களுக்கு ஏற்பட்ட அக, புற வலிகளையும் பிரதிபலிக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் சாதி மதப் பாகுபாடு, விதவைப் பெண்களின் மனநிலை, மறுமணம், ஆண், பெண் உறவுநிலை, அதனைச் சமூகம் அணுகும் முறை உள்ளிட்ட சிக்கல்கள் விளக்கப்பட்டுள்ளன.

தென்மாவட்ட சிற்றிலக்கியப் படைப்பாளிகளின் இயற்கைநேயவுணர்வு

பாண்டிய நாட்டைச் சார்ந்த சிற்றில்கிய நூல்கள் ‘முக்கூடற்பள்ளு’ மற்றும் ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ ஆகும். இச்சிற்றிலக்கியங்கள் தென்தமிழக நிலப்பரப்பை இயற்கை வருணனையுடன் சித்தரிக்கின்றன என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. பொதுவாகப் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ‘முக்கூடற்பள்ளு’, திருநெல்வேலிப் பகுதி மக்களின் வேளாண் வாழ்க்கை, நாட்டுப்புற மரபுகள், வட்டார வழக்கு மற்றும் கலாச்சார நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றது. இதற்கு மாறாக, மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ (பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது),…

இரா. நாறும்பூநாதன் படைப்புகளில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள்

குழந்தை தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு பெரும் சாபக்கேடு ஆகும். குழந்தைகள் வேலைக்குச் செல்வது என்பது ஒரு தனிநபரின் பிரச்சனை அல்ல. அது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தை இருட்டிற்குள் தள்ளும் சமூகக் குற்றமாகும். சட்டங்களினாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினாலும் மட்டும் இந்த அவலத்தை முழுமையாக வேரறுக்க முடியாது என்பதை இரா. நாறும்பூநாதன் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது.