தலித் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த சாதியப் பாகுபாடுகளாலும் ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் அனுபவங்களையும் உரிமைக் குரலையும் வெளிப்படுத்தும் இலக்கியப் போக்காகத் தலித் இலக்கியம் உருவெடுத்துள்ளது. மனிதநேயத்தையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இவ்விலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் துயரங்கள், சமூகப் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு, எதிர்ப்பு உணர்வு, விடுதலை வேட்கை ஆகியவற்றைப் பதிவு செய்கிறது. ‘தலித்’ என்னும் சொல்லின் பொருள், அதன் தோற்றம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை விளக்குவதோடு, தலித் இலக்கியத்தின் உருவாக்கப் பின்னணியும் அதன்…

சாதி ஆணவத்தின் ஆவணம்- செவ்வருகை

சாதி இந்திய பண்பாட்டின் நிறுவனமாக உள்ளது. இங்கு புனிதம்X தீட்டு, மேல்X கீழ் என்பது இயல்பாக இருக்கிறது. சாதிய, பாலின ஒடுக்குமுறை பெண்ணைச் சொத்தாக பார்க்கிறது. அதனைப் பெருமையாகக் கருதும் போக்கு உள்ளது.அது பெருமை அல்ல ஆணவம் என்று மறுக்கும் சிறுகதைகளை ‘செவ்வருக்கை’தொகுப்பு. இந்திய சமூகம் பெண்ணை எவ்வளவு அடிமைப்படுத்தி கொலையும் தற்கொலையும் செய்திருக்கிறது. செய்ய வைத்திருக்கிறது என்பதற்கு ‘சுதாரி’ ‘-கன்னிக்குழி ‘சிறுகதைகள் காட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கும் கழக கட்சிகள் இந்திய சமூக அமைப்பின்…

பாமாவின் படைப்புகளில் சாதி தீண்டாமைகள்

தமிழிலக்கிய வரலாறானது சங்க இலக்கியத்தில் தொடங்கி, பக்தி இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வளர்ந்து வந்தது. அத்தகைய வளர்ச்சியானது தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றில், நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், உரைநடை, கட்டுரைகள் என்ற அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது. அந்நிலையில் நாவல் என்ற வரிசையில், சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எழுதக்கூடிய, சமுதாயத்துடன் தொடர்புடைய வரலாறு, அரசியல், பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில் தலித் இன மக்கள் குறித்து எழுதப்பட்ட பாமாவின் படைப்புக்களின் வழி,…

தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள்

தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் என்று தலைப்பின் வாயிலாக தாலாட்டுப்பாடல்கள், பழமொழிகள், சிவகங்கை சரித்திரக் கும்மி கூறும் கலைநிகழ்வுகள், வட்டார மற்றும் நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், தேனி மாவட்டத்து தொழில்ப்பாடல்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

பூமணி சிறுகதைகளில் சமுதாயம்

கரிசல் இலக்கிய படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பூமணி ஆவார். அவரது படைப்புகளில் எதார்த்த வாழ்வியல் மையம் கொண்டுள்ளன. பசி, தாகம், வறுமை, தண்ணீர்த் தட்டுப்பாடு, விவசாயத்தின் நிலையற்ற தன்மை ஆகியவை இந்த சமூக அவலத்தின் பல்வேறு முகங்களாக அமைகின்றன. இவை மிகைப்படுத்தப்பட்ட பரிதாபக் காட்சிகளாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையின் இயல்பான நிகழ்வுகளாகக் கதைகளில் இடம்பெறுகின்றன. இதனால் பூமணியின் சிறுகதைகள் கரிசல் மக்களின் துன்பத்தைப் பதிவு செய்வதோடு, அவர்களின் உழைப்பு, மன உறுதி, மண்ணுடனான உறவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கரிசல்…

பண்பாட்டுப் பார்வையில் சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில்

பண்பாடு என்பது காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். மனிதனின் நாகரீகத்தைத் தலைமுறை தலைமுறையாயக் கடத்தப்படுபவை மக்களின் பண்பாடு. அதிலும் குறிப்பாக நாட்டார் மக்களின் பண்பாடு ஆய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று மக்களின் ஆன்மீக நம்பிக்கையுடன் வழிபாட்டின் அங்கமாய் இருப்பவை தெய்வங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று பத்திரகாளியம்மன் கோயில். பல நாட்டுப்புற மக்களின் வழிபாட்டிற்குரியத் தெய்வமாக இருக்கும் இக்கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் ஆகிய அனைத்திலும் பண்பாட்டு எச்சம் காணப்படுகிறது.…

புறநானூற்றில் பண்பாட்டு நெறிகள்

சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சமூக அமைப்பையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதற்கான முதன்மையான இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றுள் புறநானூறு தமிழரின் புறவாழ்வை விரிவாகப் பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க நூலாகும். அரசியல், போர், வீரம், கொடை, விருந்தோம்பல், நட்பு, உறவு, உணவு, உடை, அணிகலன், கலை, இசை, புலவர் மரபு, சமூக உறவுகள், பெண்களின் பங்களிப்பு, ஈகை, மானம், புகழ் போன்ற பல்வேறு கூறுகள் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெறுகின்றன. எனவே, புறநானூறு ஒரு…

Intersecting Identities and Women’s Agency: An Intersectional Reading of Chitra Banerjee Divakaruni’s Sister of My Heart

Chitra Banerjee Divakaruni’s Sister of My Heart (1999) explores the intimate relationship between cousins Anju and Sudha, whose lives are shaped by family, marriage, tradition, social expectations, and geographical displacement. Both women experience the restrictions imposed on women in a patriarchal society, but their experiences differ. Their lives are shaped by family status, caste location,…

அறியப்படாத தமிழகத்தின் வழி தென் தமிழக மக்களின் வாழ்வியல்

தமிழர்களின் வாழ்வியல் என்பது மொழி, உணவு, நம்பிக்கை, பண்பாடு, மரபு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். இவ்வாழ்வியல் கூறுகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன், காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும் பெற்றுள்ளன. தொ. பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் என்னும் நூல், குறிப்பாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகளை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. இந்நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்மொழியின் மாண்பு, தமிழரின் உணவு முறைகள், உணவு சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவை…