கி.ராஜநாராயணனின் ‘கதவு ‘ சிறுகதையில் வாழ்வியல் பண்பாடு

பெண்கள், சிக்கல்கள் நிறைந்த இவ்உலகில் ஏமாற்றங்களையும், வறுமையையும் சந்திக்கும் பொழுது அவர்களை தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை என்னும் கருவியாகும். குடும்பம், தொழில், குழந்தைகள், சமூகம் என்னும் புறப்போராட்டங்களால் உடைந்து விடாமல் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் சமூகத்தில் நடமாட வேண்டும் என்னும் கருப்பொருளையும், குழந்தைகளின் உலகம் தன்னலமற்றது. மகிழ்ச்சியானது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். கற்பனைத் திறனும், படைப்பாற்றல் திறனும் அவர்களை கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். இக்குழந்தைகளின் வாழ்வில் வறுமை நுழைந்து விட்டால் மனம் வாடி சிதைந்து விடுவர் என்னும்…

சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டில் பண்பாட்டுப் பதிவுகள்

தமிழகத்தின் நாட்டுப்புற சமய மரபில் சித்தர் வழிபாடும், குரு வழிபாடும் முக்கிய இடம் பெறுகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், கோவை, ஈரோடு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபடப்படும் சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டு மரபைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். சாது சிதம்பர சுவாமிகள் ஒரு சமய சீர்திருத்தவாதியாகவும், மக்களின் துயர் துடைத்த ஞானகுருவாகவும் விளங்கியவர். அவரது வழிபாட்டில் அன்னதானம், சமத்துவம், சைவ நெறி, குரு பக்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்ற பண்பாட்டுக்…

‘கன்னிமை’ – கீ.ராவின் சிறுகதை காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல்

தமிழ் இலக்கிய உலகில் மக்கள் அனைவரையும் சென்றடையும் படைப்புக்களாக சிறுகதைகள் விளங்குகின்றன. தனக்கென தனித்தோர் கரிசல் வட்டார வழக்கு நடையில் எளிமையும் உணர்ச்சியும் கலந்த சிறுகதைகளால் மக்களைக் கவர்ந்த படைப்பாளராக கி. ரா அறியப்படுகிறார். காலம் தாண்டி நிற்கும் எழுத்துப் படைப்பாக கீ.ராவின் படைப்புலகம் விளங்குகின்றது. பெண்ணின் ஆளுமை, நிர்வாகத் திறன் உபசரிப்பு மனித நேய சமூக உறவாடல்கள் திருமணத்திற்கு முந்திய நிலையில் எத்தகைய சுதந்திர உணர்வோடு, அன்றாட வாழ்வியல் நடைமுறையாகின்றது என்பதை நாச்சியார் கதாபாத்திரத்தின் வாயிலாக…

தென் மாவட்ட சடங்கு முறைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வாழ்வியல் சடங்குகள் மிகவும் முக்கியமாக பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள சடங்கு சம்பிரதாயங்களை கூறுவதே இவ்வாய்வு ஆகும். “சுருள்வீச்சு” என்னும் சிறுகதைத் தொகுப்பு தென் மாவட்ட பண்பாட்டு பதிவாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலே இக்கட்டுரை அமைகிறது.

Mapping the Unmapped: Climate Injustice, Water and Digital Visibility in Chioma Okereke’s Water Baby

Contemporary African climate fiction increasingly represents environmental crises through the everyday experiences of communities negotiating poverty, displacement, infrastructure and unequal access to resources. Chioma Okereke’s Water Baby (2024), set primarily in Makoko, a floating community on the Lagos Lagoon, participates in this emerging body of African climate fiction by bringing together water, climate vulnerability, digital…

கு.அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்”சிறுகதையில் பண்பாட்டுப் பதிவுகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கால இலக்கியம் என்ற இலக்கிய வகைப்பாட்டில் சிறுகதை இலக்கியம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதை எழுத்தாளர்களில் எளிய நடையில் அழகு தமிழில் சிறுகதைகளை வார்த்தெடுத்த பெருமைக்குரியவர் கு.அழகிரிசாமி ஆவார். இவரின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை ஏழ்மையிலும் மனிதநேயம், தாய்மை, விருந்தோம்பல், பகிர்ந்துண்ணுதல் போன்ற உயரிய தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் சிறந்த படைப்பாகும். எளிய நடையிலும் ஆழ்ந்த உணர்வுகளுடனும் அமைந்துள்ள இக்கதையில் தாயம்மாள், தன் பிள்ளைகளுடன் பெற்றோரற்ற சிறுவன் ராஜாவையும் அன்போடு அரவணைத்து, உணவு,…

பாமாவின் படைப்புகளில் தலித்திய மொழி

எல்லா ஊடகங்களையும் விட மொழியானது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. மொழி என்பது, ஒருவர் அறிந்துள்ள வார்த்தைகளைத் தான் வாழும் இடச்சூழலுக்கேற்ப பிறருடன் பகிர்ந்து கொள்வது என்பதாகும். தமிழ் இலக்கிய மொழி நடையில் தலித் இலக்கிய வரவால், புதியதாய் ஒரு வடிவம் தோன்றியுள்ளது. தலித் இலக்கியம் என்பதே எதிர்ப்பிலக்கியம் என்று கூறப்படுகிறது. ஒரு படைப்பிற்கு இலக்கியத்தகுதி வழங்குவதில் மொழிநடை இன்றியமையாப் பங்காற்றுகிறது. இன்று தலித் இலக்கியங்கள் தங்களுக்கென்று புதிய மொழிநடையை உருவாக்கிக் கொண்டுள்ளது. எளிமையும்,…

நுண்வெளிக் கிரகணங்களில் ஒக்கலிகர் பண்பாட்டுப் பதிவுகள் – பழங்குடி மரபின் சாயல்

மதுரை வட்டாரத்தைச் சார்ந்த நாவல் சு, வேணுகோபால் அவர்களின் நுண்வெளிக்கிரகணங்கள். இந்நாவல் ஒர் இனக்குழுச் சமூகம் என அறியத்தக்க ஒக்கலிகர் வாழ்வியலைப் பேசுகிறது. கன்னட மொழிபேசும் ஒக்கலிகர் வட கர்நாடகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் முற்றிலும் சிறப்புத் தன்மை உடையதாக விளங்குகிறது. இவரது பண்பாட்டு அடையாளங்கள் வழி இவர்கள் ஆதி இனக்குழு சமுதாயத்தின் எச்சமாக விளங்கும் பழங்குடி மரபோடு எண்ணத்தக்கவர்கள் என இக்கட்டுரை நிறுவ முற்படுகிறது. கூடவே, எழுத்தாளர் ச. வேணுகோபால்…

தென்மாவட்டங்களில் நாட்டுப்புற நம்பிக்கை

இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில வட்டாரத்தின் நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்து ஆராயப்படுகிறது வாய் மொழியாக மரபுகள் எவ்வாறு மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன என்பதை விளக்குவது முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக கையாண்டு ஆய்வு முறைகள் மற்றும் அதன் முடிவுகள் சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. முன்னுரை: மனித நாகரீகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே நாட்டுப்புற வழக்காலும் தோன்றி விட்டன. வாய்மொழியாகவும் பார்த்து செய்தல் மூலம் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் தலைகள் பாடல்கள் சடங்குகள் கவிதைகள் பழமொழிகள்…