புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் அரசு நலத்திட்டங்கள்: ஓர் ஆய்வு

தமிழ்நாடு அரசு கடல்வள பாதுகாப்பு நோக்கில் ஆண்டுதோறும் கடல்மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தி வருகிறது. இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு அவசியமானதாக இருந்தாலும், மீன்பிடியையே முழு வாழ்வாதாரமாகக் கொண்ட புதுக்கோட்டை கடலோர மாவட்டங்களின் மீனவ குடும்பங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதை ஈடுகட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டத்தை நடத்தி வருகின்றன, இதன்படி 2025-26 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த பின்னணியில், புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக்…

திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாட்டு மரபு – திருப்புகழுக்கான முன்னோட்டம்

தமிழரின் சமய மற்றும் பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழியின் தலைவனாகக் கருதப்படும் முருகப்பெருமான் வழிபாடு தொன்மையான தொடர்ச்சியைக் கொண்டதாகும்1. சங்க இலக்கியப் பரப்பில் முருகன் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக மட்டுமன்றி, வீரியம், இளமை, இயற்கை, வேல், மலை, இசை, நடனம், திருவிழா, வேண்டுதல், அருள் ஆகிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகளோடு இணைந்த தெய்வ உருவமாகப் பதிவாகி இன்று வரை மக்களின் மனதில் வாழ்ந்துவருகிறார்1. இம்மரபை விரிவாகப் பதிவு செய்யும் முக்கியமான சங்க இலக்கியப் படைப்பாக திருமுருகாற்றுப்படை விளங்குகிறது1.…

Multi-Ethnic People and Culture in Northern Sri Lanka: A Study Based on the Kingdom of Jaffna

Northern Sri Lanka has been a region of distinctive cultural traditions since ancient times. This study considers Northern Sri Lanka primarily as the territory associated with the Jaffna Kingdom. Although Tamils constituted the majority population and Hindu culture was influential, Buddhism also had an impact on the region. In addition, Sinhalese, South Indian communities, Javakas,…

திருக்குறளில் மருத்துவ மேலாண்மை “மருந்து” அதிகாரத்தை (குறள் 941–950) முன்வைத்த ஒரு பகுப்பாய்வு

Background: The Tirukkural, the classical Tamil treatise on ethics, polity and love, devotes a full chapter to medicine (Chapter 95, Marunthu; Kurals 941–950) within its section on polity (Porutpal). In ten couplets it addresses health, diet, disease prevention, diagnosis and treatment. Objective: This study examines the medical thought of the chapter through the lens of…

தூப்புக்காரி: சாதி–பாலின–வர்க்க ஒடுக்குமுறையும் துப்புரவுத் தொழிலாளர்களின் கண்ணியமும்

மலர்வதியின் தூப்புக்காரி (2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெற்றது) புதினம், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணிசெய்யும் கனகம், அவரது மகள் பூவரசி ஆகியோரின் வாழ்வியலைச் சித்திரிக்கிறது. சமூகத்தின் தூய்மையைப் பராமரிக்கும் உழைப்பாளர்களே சமூக விலக்கலுக்கு ஆளாவது எவ்வாறு நிகழ்கிறது என்பதே இவ்வாய்வின் மையம் ஆகும். நோயாளிகளின் உடல்நலத்தைக் காக்கும் மருத்துவமனை, அதனைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உடல்நலம், ஓய்வு, பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை எவ்வாறு அணுகுகிறது என்ற முரணை இக்கட்டுரை…

தெருக்கூத்தும் பாரதமும்

“தெருக்கூத்தும் பாரதமும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கோண்டு தலைப்பின் எக்காரணியும் விடுபடாமல் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதும் இத்தலைப்புத் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து சான்றாதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது கட்டுரையில் வரும் தெருக்கூத்துப்பற்றியக் கருத்துக்களும், தெருக்கூத்துக் கலைஞர்கள் கூறும் கதைகளும், பாரதமும் பற்றிய கதைகளும், கருத்துக்களும், தெருக்கூத்தும் பாரதமும் பற்றிய இயல்புகளும,; தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரையின் முடிவில் தொகுப்புரையும், முடிவுரையும் அதன் பிறகு தெருக்கூத்தும், பாரதமும் பற்றிய ஆதாரங்கள் அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மானுடத்தின் மெய்யியல்: சுய அறிவும், இயற்கைச் சமநிலையும், உலக அமைதிக்கான கல்வியும்

இவ்வாய்வு மனித உடலின் இயக்கம், உயிரியல் தகவமைப்பு, இயற்கையின் உணவுச் சுழற்சி மற்றும் மனிதநேயக் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு விரிவான வாழ்வியல் மெய்யியலை முன்வைக்கிறது. உயிரற்ற மின்னணு சாதனங்களைக் நுணுக்கமாகக் கையாளும் நவீன மனிதன், உயிருள்ள தன் உடலின் இயக்கம், வாழ்வின் நோக்கம் மற்றும் “நான் யார்?” என்ற சுய அறிவை கல்வி மூலமாக வழங்குவதற்கு தவறி வருகிறோம். மனிதனின் தோலின் நிறம் மற்றும் வெளிப்புற உடலமைப்பு மாறுபாடுகள் நீண்டகால உயிரியல் தகவமைப்பே தவிர, உயர்வு…

கவிஞர் நா. முத்துக்குமாரின் படைப்புகளில் நாட்டுப்புற இலக்கியங்களின் தாக்கம்

நாட்டுப்புற இலக்கியங்களின் தாக்கத்தை ஆராய்வதற்கு, கிராமியப் பொருள்களின் இடம்பெறுதலை மட்டும் கணக்கிடுவது போதாது. வழக்காறு ஒரு கவிதைக்குள் நுழையும்போது அதன் பொருளும் சமூகச் செயல்பாடும் எவ்வாறு மாறுகின்றன என்பதை விளக்க வேண்டும். இக்கட்டுரை நா. முத்துக்குமாரின் தேர்ந்தெடுத்த தனிக்கவிதைகளில் வாய்மொழிப் பாங்கு, குழந்தைப் பராமரிப்பு மரபு, நம்பிக்கை, பொருள்சார் பண்பாடு, உழைப்பு, உறவுநினைவு ஆகியவற்றின் கவிதையாக்கத்தை ஆராய்கிறது. இணையத்தில் சரிபார்க்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இடம்பெறும் கவிதைச் சான்றுகள் நெருங்கிய வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. 2021–2026 காலப்பகுதியைச் சேர்ந்த பதினைந்து…

தேன்கிண்ணம் கவிதையில் இறையும் இயற்கையும்

அறிஞர் சூ.செல்லப்பா ஓர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியாற்றியபோது பல கவிதை நூல்களைப் படைத்துள்ளார். “தேன் கிண்ணம்” என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுதியில் பல பாடு பொருள்களைக் கவிதையாக்கியுள்ளார். அவற்றில் இறை, இயற்கை இவ்விரண்டைப்பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.படைப்பாளி, ஏராளமான கவிதை நூல்களையும், மொழி பெயர்ப்புக் கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் உருவாக்கியிருந்தாலும் “தேன்கிண்ணம்” எனும் கவிதை நூல் மட்டுமே இதன் ஆய்வு எல்லையாக அமைகின்றது.இயற்கையைப் பற்றிய கவிதையில் மனித இனத்திற்கு மட்டுமல்லாது எல்லா உயிர்களுக்கும் பயன் அளிக்கும் தன்மையையும்…