மகாபாரத மறுவாசிப்பில் பூமணியின் கொம்மை
மகாபாரத மறுவாசிப்புப் பனுவல்களில் எழுத்தாளர் பூமணியின் கொம்மை, அவர்தம் வட்டார மரபறிவின் பிரதிபலிப்பாக அமைகிறது. கொம்மையில் இடம்பெற்றுள்ள பெண்மொழியின் தேவையையும், நாட்டுப்புறக் கூறுகளின் கட்டமைப்பையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. மகாபாரதத்தின் புனிதத்துவ மரபுகளையும் நாட்டுப்புற மரபுகளையும் பூமணி எவ்வாறு தன் புனைவிற்கேற்ப மறுகட்டமைப்பு செய்திருக்கிறார் என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது