நாஞ்சில் நாடன் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள்

சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டறியும் நுட்பமும் அதை அலசி ஆராயும் ஆற்றலும் படைப்பாளர்களுக்கு அவசியமானது என்பர். சமுதாய உணர்வுகள் இன்றி எந்த ஒரு படைப்பாளளும் தன்னைப் படைப்பாளனாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. ஒரு படைப்பாளன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் சமூக மாற்றங்களை தன் உள்ளத்தில் பதிவு செய்து அதனை சிறந்த படைப்பாக வெளிப்படுத்துகின்றான். இதனை இன்றைய தற்காலப் படைப்பாளர்கள் சிறப்புடன் செய்துவருகின்றனர். அந்தவகையில் நாஞ்சில் நாடன் தன்னுடைய படைப்புகளில் சமூகத்திற்குத் தேவையான மாற்றங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாகப்…

கி.ரா.வின் ‘கதவு’ சிறுகதை புலப்படுத்தும் பண்பாடு

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை இயல்பான மொழிநடையிலும் நுண்ணிய சமூகப் பார்வையிலும் பதிவு செய்தவர் கி. ராஜநாராயணன் (கி.ரா.). அவருடைய ‘கதவு’ சிறுகதை, ஒரு பழைய வீட்டின் கதவை மையப்படுத்தி அமைகிறது. வறுமை, குடும்ப உறவு, குழந்தைகளின் விளையாட்டு, உழைப்பு, கிராமிய சமூக உறவுகள், வரிவசூல், பசி, இயற்கைச் சூழல், பொருளாதார நெருக்கடி, பொருள்களின் நினைவியல் மதிப்பு, உணவுப் பழக்கம், குழந்தைகளின் பொறுப்புணர்வு, கிராம நிர்வாக அமைப்பு, வரிவிதிப்பு, தாய்மை உணர்வு போன்ற…

வைரமுத்து கவிதைகளில் மனித உறவுகள்

மனித வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக உறவு விளங்குகிறது. மனிதன் தனித்து இயங்க இயலாத சமூக உயிரியாக இருப்பதால், குடும்பம், சமூகம், நட்பு, காதல் போன்ற பல்வேறு உறவுகளின் வழியாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் மனித உறவுகள் அன்பு, பாசம், கருணை, பொறுமை, தியாகம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகத் தாய்–மகள், தந்தை–மகன், கணவன்–மனைவி, காதலன்–காதலி, நட்பு ஆகிய உறவுகள் தனிமனித உணர்வுகளோடு மட்டுமல்லாமல் சமூகப் பண்பாட்டையும்…

கு.அழகிரிசாமியின் சிரிக்கவில்லை-மௌனப் பார்வை

‘சிரிக்கவில்லை’ சிறுகதை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படும் உளவியல் உணர்வுகள், சமூகச் சூழல், உறவுகளின் தன்மை, மனப்போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆராயத்தக்கதாக அமைகிறது. இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் உரையாடல்,உரையாடலின்மைகளின் வழியாக அவர்களின் வெளிப்படையான நடத்தைக்கும் உள்ளார்ந்த மனநிலைக்கும் இடையிலான வேறுபாடு வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல; சில நேரங்களில் மனவேதனை, ஏமாற்றம், இயலாமை, சமூக அழுத்தம் ஆகியவற்றை மறைக்கும் வெளிப்புறத் தோற்றமாகவும் அமைகிறது . ‘சிரிக்கவில்லை’ சிறுகதையின் கதை அமைப்பு,…

ஆற்றுப்படை நூல்கள் வழி நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் ஓர் ஒப்பீடு

சங்க இலக்கியப் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அமைந்த ‘ஆற்றுப்படை நூல்கள்’ (பொருநர், சிறுபாண், பெரும்பாண், கூத்தராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை) கலைக் குழுவினரின் பயணத்தையும், கொடை மரபையும் பேசும் பிரதான இலக்கிய வடிவங்களாகும். மனோஜ் குரூர் எழுதி கே.வி. ஜெயஸ்ரீ தமிழாக்கம் செய்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ புதினம், இச்சங்க ஆற்றுப்படை மரபின் தொடர்ச்சியாகவும், அதேவேளையில் அதை நவீனப் புனைவுப் பார்வையில் மறுவாசிப்பு செய்யும் ஒரு மாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.

பூமணியின் வெக்கை: ஓர் சமூகவியல் ஆய்வு

தமிழ் இலக்கியத்தில் சமூக வாழ்வையும் சமூக முரண்பாட்டைமயும் பதிவு செய்யும் படைப்புகளுள் பூமணியின் வெக்கை நாவல் குறிப்பிடத்தக்கது. கரிசல் நில மக்களின் வாழ்வியல், நிலவுடைமைச் சமூக அமைப்பு, சாதிய முரண்பாடு, வன்முறையின் தோற்றுவாய், அரசு நிறுவனங்களின் செயல்பாடு, குடும்ப அமைப்பு, பாச உணர்வு, பெண்களின் பாத்திரம் போன்ற பல்வேறு அரசியல் சமூகக்கூறுகளை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. தனிமனிதச் செயலுக்கும் சமூகச் சூழலுக்கும் இடையிலான உறவை ஆய்வு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூமணியின் கருத்தியல் நிலைப்பாடு நிலவுடைமை சாதிய சமூகத்தை…

மேலாண்மை பொன்னுச்சாமியின் “விரல் – சிறுகதைத் தொகுப்பு” – ஓர் பார்வை

மேலாண்மை பொன்னுச்சாமி கரிசல் மண்னின் வாழ்வியலை பதிவு செய்த முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரது ‘விரல்’ சிறுகதைத் தொகுப்பை மையமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. கரிசல் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், குறிப்பாக பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களை இத்தொகுப்பில் உள்ள 13 கதைகள் வழியே ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். பம்புசெட் பாசனம், இரசாயன உரம் போன்ற நவீன விவசாய முறைகளால் பாரம்பரிய விவசாயம் எவ்வாறு மாறியது, நிலவுடைமையால் கூலி உறவு சிதைந்தது, ‘ஊர்சோறு’ போன்ற…

Minor Deity Worship and Folk Traditions in Ancient Tamil Society

Minor deity worship forms an important part of the religious, social, and cultural traditions of Tamil society. The origins of these traditions can be traced to the early relationship between human beings and nature, as well as to ancestral, hero, and community-based forms of worship. Ancient Tamil literary sources such as the Tolkappiyam, Akananuru, Purananuru,…

ஆழிசூழ் உலகு நாவல் காட்டும் பரதவர் வாழ்வியல்

நவீன இலக்கியங்களில் ஒன்றான நாவலானது மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகும். படைப்பாளரின் சமூக நோக்கங்களுக்கு ஏற்ப படைப்பிலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரான ஜோடி குரூஸ் அவர்கள் தங்கள் படைப்புகளில் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் நாமம் பரப்பும் பரதவ இன மக்களின் வாழ்வியலை அனுபவத்தின் வாயிலாக படைத்திருப்பதைக் காண முடிகிறது. அவ்வகையில் அவருடைய ஆழி சூழ் உலகு நாவலில் பரதவ மக்களின் வாழ்வியல் கூறுகளான தொழில், விருந்தோம்பல் பண்பு, மேற்கொள்ளும் பிரச்சனைகள்…