ISSN: 3107-7781e-ISSN: 3049-0723Google Scholar | Crossref | Index Copernicus | Internet Archive | Humanities Commons | ABCD Index

இதழ் பற்றிAbout the Journal

தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

Tamilmanam – International Research Journal of Tamil Studies brings research on the Tamil language, its literature and its culture to readers in Tamil and in English.

நாங்கள் யார்Who we are

தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (TIRJTS; e-ISSN 3049-0723 (இணையம்) · p-ISSN 3107-7781 (அச்சு)) இரட்டை மறைவு மதிப்பாய்வுடன் மாதந்தோறும் வெளிவரும் திறந்த அணுகல் ஆய்விதழ். வெளியீடு: நூலகத் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி. இதன் முதல் இதழ் அக்டோபர் 2024 இல் வெளிவந்தது.

தமிழ் மொழி, இலக்கணம், மொழியியல்; செவ்வியல், இக்கால இலக்கியங்கள்; இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம்; தமிழர் பண்பாடு, வரலாறு, நாட்டுப்புறவியல், கலைகள்; மொழிபெயர்ப்பியல்; தமிழ்க் கல்வி, கணினித் தமிழ் ஆகிய துறைகளின் அசல் ஆய்வுகளையும், அவற்றோடு தொடர்புடைய மனிதவியல், சமூக அறிவியல் ஆய்வுகளையும் இவ்விதழ் வெளியிடுகிறது. வழக்கமான இதழ்களுடன், துறைகளும் ஆய்வு மையங்களும் முன்மொழியும் கருப்பொருள்களில் சிறப்பிதழ்களும் வெளிவருகின்றன.

கட்டுரைகளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். இரு மொழி வாசகர்களும் தேடிக் கண்டடையவும் மேற்கோள் காட்டவும், ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ஆய்வுச் சுருக்கமும் திறவுச் சொற்களும் இரு மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன.

Tamilmanam – International Research Journal of Tamil Studies (TIRJTS; e-ISSN 3049-0723 (Online) · p-ISSN 3107-7781 (Print)) is a double-blind peer-reviewed, open-access journal published monthly by the Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi. The first issue appeared in October 2024.

The journal publishes original research on Tamil language, grammar and linguistics; classical and modern Tamil literature; literary criticism and comparative literature; Tamil culture, history, folklore and arts; translation studies; and Tamil education and computing – together with allied work in the humanities and social sciences. Besides its regular issues, it publishes special issues on themes proposed by departments and research centres.

Articles may be written in Tamil or English. The title, abstract and keywords of every article are published in both languages, so that readers of either language can find and cite it.

வெளியீட்டு முறைHow we publish

  • மதிப்பாய்வு: இரட்டை மறைவு முறையில், குறைந்தது 2 தனித்த வல்லுநர்களால்.
  • திறந்த அணுகல்: வெளியான நாள் முதல் ஒவ்வொரு கட்டுரையையும் தடையின்றி இலவசமாகப் படிக்கலாம், பதிவிறக்கலாம்.
  • உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் 4.0 பன்னாட்டு (CC BY 4.0); பதிப்புரிமை ஆசிரியர்களிடமே.
  • கட்டணம்: சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ஏற்கப்பட்ட பின் ₹1,000 வெளியீட்டுக் கட்டணம்.
  • அடையாளங்கள்: ஒவ்வொரு கட்டுரைக்கும் Crossref DOI (10.63300); ஆசிரியர்களுக்கு ORCID.
  • அறநெறி: வெளியீட்டு அறநெறிக் குழுவின் (COPE) அடிப்படை நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.
  • Peer review: Double-blind, by at least 2 independent experts.
  • Open access: every article is free to read and download from the day it is published, with no embargo.
  • Licence: Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0); authors keep the copyright.
  • Fees: no submission fee; an article processing charge of ₹1,000 after acceptance.
  • Identifiers: Crossref DOI (prefix 10.63300) for every article and ORCID iDs for authors.
  • Ethics: we follow the Core Practices of the Committee on Publication Ethics (COPE).

வெளியீட்டாளர்Publisher

தமிழ்மணம் இதழின் உரிமையாளரும் வெளியீட்டாளரும்: நூலகத் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி, இந்தியா. வெளியீட்டு முடிவுகளை வெளியீட்டாளரின் தலையீடின்றி இதழாசிரியர்களே எடுக்கின்றனர். காண்க: உரிமை, மேலாண்மை, நிதி.

Tamilmanam is owned and published by the Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi, India. Editorial decisions are taken by the editors independently of the publisher. See Ownership, management and funding.

இதழ் விவரங்கள்Journal particulars

இதழ்Journalதமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்Tamilmanam – International Research Journal of Tamil Studies
சுருக்கப் பெயர்AbbreviationTIRJTS
e-ISSN3049-0723 (இணையம்)3049-0723 (Online)
p-ISSN3107-7781 (அச்சு)3107-7781 (Print)
DOI முன்னொட்டுDOI prefix10.63300 (Crossref)
முதல் வெளியீடுFirst issueஅக்டோபர் 2024October 2024
வெளியீட்டுக் காலம்Frequencyமாதந்தோறும்Monthly
மொழிகள்Languagesதமிழ், ஆங்கிலம் (தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள் இரு மொழிகளிலும்)Tamil and English (title, abstract and keywords in both languages)
மதிப்பாய்வுPeer reviewஇரட்டை மறைவு, குறைந்தது 2 மதிப்பாய்வாளர்கள்Double-blind, at least 2 reviewers
உரிமம்LicenceCC BY 4.0
பதிப்புரிமைCopyrightஆசிரியர்களிடமேRetained by the authors
வெளியீட்டுக் கட்டணம்Publication feesஏற்கப்பட்ட பின் மட்டும் APC ₹1,000; சமர்ப்பிப்பு, பக்கக் கட்டணம் இல்லைAPC ₹1,000, only after acceptance; no submission or page charges
வெளியீட்டாளர்Publisherநூலகத் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சிDepartment of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi
நாடுCountryஇந்தியாIndia
தளம்PlatformOpen Journal Systems (OJS)

நோக்கமும் எல்லையும்Aims and scope

நாங்கள் வெளியிடும் துறைகளும், ஏற்காத படைப்புகளும்.The subjects we publish and the work we do not consider.

ஆசிரியர் குழுEditorial board

இதழாசிரியர்கள், பன்னாட்டுக் குழு, ஆலோசனைக் குழு.Editors, the international board and the advisory committee.

இதழ் நெறிமுறைகள்Journal policies

திறந்த அணுகல், மதிப்பாய்வு, அறநெறி, திருத்தங்கள் முதலியன.Open access, peer review, ethics, corrections and more.

கட்டுரையாளர் வழிகாட்டிAuthor guidelines

கட்டுரையைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் முறை.How to prepare and submit your manuscript.

உங்கள் ஆய்வை தமிழ்மணம் இதழில் வெளியிடுங்கள்Publish your research with Tamilmanam

ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம்; சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை.

Submissions are open all year, with no submission fee.