- Section
- Articles
- Published
- Pages
- 85-90
Abstract
தமிழ் இலக்கிய உலகில் மக்கள் அனைவரையும் சென்றடையும் படைப்புக்களாக சிறுகதைகள் விளங்குகின்றன. தனக்கென தனித்தோர் கரிசல் வட்டார வழக்கு நடையில் எளிமையும் உணர்ச்சியும் கலந்த சிறுகதைகளால் மக்களைக் கவர்ந்த படைப்பாளராக கி. ரா அறியப்படுகிறார். காலம் தாண்டி நிற்கும் எழுத்துப் படைப்பாக கீ.ராவின் படைப்புலகம் விளங்குகின்றது. பெண்ணின் ஆளுமை, நிர்வாகத் திறன் உபசரிப்பு மனித நேய சமூக உறவாடல்கள் திருமணத்திற்கு முந்திய நிலையில் எத்தகைய சுதந்திர உணர்வோடு, அன்றாட வாழ்வியல் நடைமுறையாகின்றது என்பதை நாச்சியார் கதாபாத்திரத்தின் வாயிலாக தனது ‘கன்னிமை’ சிறுகதையில் கீ.ரா வெளிப்படுத்துகிறார். அதனூடே கரிசல் மக்களின் பண்பாடும் புலனாகின்றது. திருமணமான பின்பு பெண்ணின் வாழ்க்கை நிலை முற்றிலும் மாறுபடுவதையும் ‘கன்னிமை’ சிறுகதை உணர்த்துகிறது கரிசல் மக்களின் வாழ்வியலை கி.ராவின் ‘கன்னிமை’ சிறுகதை வாயிலாக சமூகவியல் ஆய்வு அணுகுமுறையில் இக்கட்டுரை காண வி்ழைகின்றது.
Keywords: வெங்கலச் சொம்பு, சருவைச் சட்டி, மடிப்பருத்தி, வெள்ளைப் பருத்தி, குலவை, உப்புக் கண்டம், திருவிளக்கு, சாண உருண்டை, கம்பங்கஞ்சி, குதிரைவாலி சோறு
References
- கி. ராஜநாராயணன்- தமிழ் விக்கி 22/ நவம்பர்/ 2025
- கதிர் மகாதேவன், இரா மோகன், பதிப்பு ஆசிரியர்கள், பெண்ணியம் இபதம, வெள்ளி விழா மலர், மதுரை தியாகராசர் பல்கலைக்கழக வெளியீடு, 1994
- ஆ.சா ஞானசம்பந்தன், இலக்கியக் கலை, கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -1953.
- ர. வி சுப்பிரமணியன், தற்கால தமிழ் இலக்கியம், நவயுக பிரசுராலயம், சென்னை, முதல் பதிப்பு-1942
