Ecology in Sangam Literature: Call for Book Chapters
- Edited by
- Veerakannan S
- Publisher
- Tamilmanam International Research Journal of Tamil Studies, 2026
This book is accepting chapters. See the call for chapters
நூல் அறிமுகம்
தமிழ்மணம் வெளியீடு (Tamilmanam Publications), பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) நூலகத்துறையுடன் இணைந்து, “சங்க இலக்கியத்தில் சூழலியல்” என்னும் தொகுப்பு நூலுக்கான ஆய்வு அத்தியாயங்களை வரவேற்கிறது.
சங்க இலக்கியம் தமிழரின் வாழ்வியலை நிலம், பொழுது, உயிர்கள், உணவு, நம்பிக்கை ஆகியவற்றோடு பிணைத்துக் காட்டும் இயற்கையின் பதிவேடாகும். தொல்காப்பியம் வகுத்த முதற்பொருள் (நிலம், பொழுது), கருப்பொருள், உரிப்பொருள் என்னும் திணைக் கட்டமைப்பே தமிழின் தொன்மையான சூழல் சிந்தனையாகத் திகழ்கிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் காணப்படும் நீர்நிலைகள், மரஞ்செடிகொடிகள், விலங்குகள், பறவைகள், பருவ மாற்றங்கள், உழவு, உணவு, மருத்துவம் பற்றிய பதிவுகளை இன்றைய சூழலியல் பார்வையில் ஆராயும் கட்டுரைகளை இந்நூல் ஒன்றுதிரட்டும்.
ஆய்வாளர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், சூழலியல் ஆர்வலர்கள் ஆகியோர் இதில் பங்களிக்கலாம். இந்நூல் ISBN எண்ணுடன், இணையத்தில் திறந்த அணுகலாக (Open Access, CC BY 4.0) வெளியிடப்படும்.
நூலின் நோக்கங்கள்
சங்க இலக்கியங்களின் சூழலியல் சிந்தனைகளை அறிவார்ந்த ஆய்வுடன் தொகுத்து, இன்றைய சூழல் சவால்களுடன் இணைத்து வாசிக்கும் நூலை உருவாக்குவதே இதன் நோக்கம்.
- சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ள இயற்கை சார்ந்த அறிவையும் சூழல் உணர்வையும் தெளிவுப்படுத்துதல்.
- திணைக் கோட்பாட்டை சூழலியல் கோணத்தில் மறுவாசிப்பு செய்தல்.
- நீர், நிலம், மரம், உயிரினங்கள் ஆகியவற்றை காக்கும் தமிழர் மரபுகளை ஆவணப்படுத்துதல்.
- சூழலியல் இலக்கிய ஆய்வின் (Ecocriticism) கோட்பாடுகளைச் சங்க இலக்கியப் பிரதிகளில் பொருத்திக் காட்டுதல்.
- இன்றைய காலநிலை மாற்றம், நீர் பாதுகாப்பு, காடு மறுசீரமைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சங்ககால சிந்தனைகளின் பொருத்தப்பாட்டை ஆராய்தல்.
- இளம் ஆய்வாளர்கள் முதல் மூத்த அறிஞர்கள் வரை பலருக்கு ஆய்வு வெளியீட்டு வாய்ப்பு அளித்தல்.
ஆய்வுப் பரப்பு (துணைத் தலைப்புகள்)
கீழ்க்கண்ட தலைப்புகளிலோ, சங்க இலக்கியம்–சூழலியல் இணைப்புடன் தொடர்புடைய வேறு தலைப்பிலோ அத்தியாயம் அனுப்பலாம்.
- சூழலியல் இலக்கியக் கோட்பாடுகளும் சங்க இலக்கியமும் (Ecocriticism)
- திணைக் கோட்பாடு – முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றின் சூழல் அறிவு
- நீர்நிலைகள் – ஏரி, குளம், ஊற்று, ஆறு, கிணறு; நீர் மேலாண்மையும் பாசனமும்
- மரங்கள், செடிகொடிகள், மலர்கள் – தாவரவியல் பதிவுகள், குறிஞ்சிப்பாட்டு மலர்கள், வீட்டு மரங்கள்
- விலங்குகள், பறவைகள், பூச்சிகள் – உயிரியல் பன்முகம், உயிர்ச்சூழல் உறவுகள், வேட்டையும் காட்டுயிர் காப்பும்
- மண், மலை, காடு, கடல், பாலை – நிலவியல் குறிப்புகள், பாலையின் திரிதல்
- பருவம் மற்றும் வானிலை – மழை, காற்று, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகள்
- உழவு, வேளாண்மை, உணவுப் பழக்கங்கள் – நிலம்சார் உணவுப் பண்பாடு
- இயற்கை மருத்துவம், மூலிகைகள் மற்றும் சூழல்சார் வாழ்வியல்
- சூழல் அறம் – கொல்லாமை, காருண்யம், பகிர்வு போன்ற வாழ்க்கை நெறிகள்
- சூழல் அழிவும் பாதுகாப்பும் – காடு அழித்தல், நீர்நிலை அழிவு, இன்றைய காலநிலை மாற்றக் கோணத்தில் சங்ககால நெறிகள்
- சங்க இலக்கியம் – சூழலியல் ஒப்பீட்டு ஆய்வுகள் (பிற மொழி இலக்கியங்கள், தமிழ்க் காப்பியங்கள், பக்தி இலக்கியம்)
