தென்மாவட்ட பழமொழிகளின் சிறப்புகள்

பழமொழிகளை உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்துகின்றனர். பழமொழிகள் மூலம் அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. தவறு செய்யும் போது அதனை எடுத்துரைக்கவும் பழமொழிகள் சிறந்த வாயில்களாக அமைகின்றன. அதுபோலவே குமரி மாவட்டக் கடலோர கிராம மக்கள் பேசும் பழமொழிகள் பிற இன மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றது. வாய்மொழியாக பழமொழிப் பேசப்படும்போது சாதாரணப் பொருள்களையும் ஆழ்ந்து சிந்திக்கும்போது உட்பொருள்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. அவ்வகையில் எவற்றை மையமாகக் கொண்டு குமரி மாவட்ட மீனவர்கள் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை…

தென்தமிழகக் கிறித்தவ மதமாற்றமும் சாதியும்

தென்னிந்தியாவில் கிறித்தவ மதத்தின் வருகை குறிப்பிடத்தக்கது. வணிக நோக்கோடு உள் நுழைந்த காலனிய ஆட்சியாளர்கள் பின்னர் மதபரப்புதலையும் மேற்கொண்டனர்.சமத்துவத்தைப் போதித்த கிறித்தவத்தின் செயல்பாடுகள் இதுவரை சமத்துவத்தைக் கண்டிராத அடித்தள மக்களை ஈர்த்தது. இதனால் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினர். ஆதிக்க வகுப்பினரில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார உயர்வுக்காக மதமாற்றத்தை மேற்கொண்டனர். இங்கு நிலவியிருந்த சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஊறியிருந்த ஆதிக்க வகுப்பினரால் அடித்தள மக்கள் தங்களுக்குச் சரிசமமாக கிறத்தவத்தில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்…

நதிக்கரை மீன்கள் காட்டும் பண்பாட்டு வெளிப்பாடுகள்

பண்பட்ட மனிதர்களின் வாய்ச் சொற்கள் கதைகளாக மாறின. அந்தக் கதைகளின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் சமூக நிலை, கலாச்சாரங்கள், பேச்சு வழக்கு, இவை போன்ற பண்பாட்டுக் கூறுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில், திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் பேட்டை வணிக வைசிய அரசு தொடக்கப்பள்ளியின் ஆசிரியரும் தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற வாழும் படைப்பாளருமான திரு. வ. செல்வ மாரிமுத்து அவர்களின் நதிக்கரை மீன்கள் என்ற கதைத்தொகுதி பல்வேறு பண்பாட்டுக்…

திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. அவற்றுள் குறவஞ்சி இலக்கியம், இலக்கியச் சுவையுடன் அக்கால மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், கலைகள், தொழில்கள், சமூக உறவுகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பதிவு செய்யும் சிறப்புடையதாக விளங்குகிறது. இவ்வகையில் “திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள்” என்னும் இவ்வாய்வு கட்டுரை திருமலையாண்டவர் குறவஞ்சியில் காணப்படும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் கண்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் இறை நம்பிக்கை, கோயில் வழிபாடு, திருவிழா…

மூன்றாம் உலகப்போர் நாவலில் உழவர்களின் சமூக இருப்பியல்

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் என்ற நாவல் பருவநிலை மாற்றத்தினை உழவுத்தொழிலின் பின்புலத்துடன் பதிவுறுத்துகிறது. தனியார் மயப்படுத்துதல் வேதிநச்சுகளை மண்ணில் உரமாக்குகின்றன. கடன் சுமை, குடும்ப உறவுகளின் முறிவு, நில இழப்பு, தலைமுறை இடைவெளி, ஓசோன்படலப் பாதிப்பு போன்ற சூழலியல் காரணிகள் உழவுத்தொழிலை பின்னலிட்டு அமைகின்றன என்ற உலகமயமாக்கல் மூன்றாம் உலகப்போரின் ஆய்வுப் பொருளாக கட்டமைக்கப்படுகிறது.

கவிமணியின் குழந்தைச்செல்வம் கவிதையில் உயிரினங்கள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘குழந்தைச்செல்வம்’ கவிதைத் தொகுப்பில் இயற்கை மற்றும் விலங்கினங்கள் மனிதர்களைப் போலப் பேசும் (Personification) மற்றும் இயங்கும் தன்மையுடன் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைக் கவரும் வகையில் அவர் கையாண்டுள்ள உயிரினங்களின் சிறப்புகள் பின்வரும் தன்மையில் அமைகின்றன.அவையாவன, பசுவும் கன்றும் என்ற இயற்கை வாழ்வின் உன்னதத்தை உணர்த்துகின்றன.அணில் குட்டியில் அணிலின் ஓட்டமும், அதன் வால் அழகும், அது கொய்யாப்பழத்தைக் கொறித்துத் தின்னும் பாங்கும் குழந்தைகளிடம் நகைச்சுவையையும் இயற்கை ஆர்வத்தையும் தூண்டும் வகையில் பாடப்பட்டுள்ளது.நாய்க்குட்டி…

பாரதியின் கவிதைகளில் ஆழ்மன ஆற்றல் (Law of Attraction) மற்றும் நேர்மறைச் சிந்தனை – ஓர் ஆய்வு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள் புதுமையான மொழிநடை, விடுதலை உணர்வு, சமூகச் சீர்திருத்தம், பெண்விடுதலை, சாதி மறுப்பு, மனிதநேயம், அறிவியல் நோக்கு, ஆன்மீகத் தேடல் மற்றும் தனிமனித ஆளுமை போன்ற பல்வேறு சிந்தனைத் தளங்களை உள்ளடக்கியுள்ளன. அவற்றுள் எண்ணம், கனவு, மனவுறுதி, தன்னம்பிக்கை, அச்சமின்மை, அறிவு மற்றும் செயல் உறுதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாய்வு, பாரதியின் கவிதைகளில் காணப்படும் அகச்சிந்தனைகளைத் தற்காலத்தில் பேசப்படும் Positive Thinking, Affirmation, Visualization, Goal-oriented Thinking, Subconscious Mind, Law of…

கொற்கை நாவலில் பொருளாதார அதிகாரமும் உட்சாதி முரணும்

பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படையில் உருவான சமூக படிநிலைகளையும் உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் ஆராய்கிறது. இவ்வாய்வில் மேசைக்காரர்கள், மெனக்கெடார்கள், கம்மரக்காரர்கள் ஆகிய பிரிவுகளின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக ஜோ டி குரூஸ் அவர்களின் ‘ கொற்கை’ நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரம் மற்றும் உட்சாதிப் படிநிலை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆராயப்படுகிறது.

அற இலக்கியங்களில் நட்பு

நட்பினை பற்றி அற இலக்கியங்கள் கூறுகின்ற மனித பண்புகளையும் அற செயல்பாடுகளையும் நட்பின் சிறப்பினையும் ஆராய்வதாக கட்டுரை அமைந்துள்ளது. திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எடுத்துக் கூறுகின்றதாக இந்த ஆய்வு அமைகிறது.

ஆதிச்சநல்லூர் – கீழடி பண்பாட்டுத் தளங்கள்

தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முதன்மையான ஆதாரங்களில் தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற புழங்கு பொருட்கள், நாணயங்கள் போன்ற எழுத்து ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, தொழில், உணவு, குடியிருப்பு, இறப்பு மரபு, வணிகம், கைவினை, எழுத்தறிவு ஆகியவற்றை நேரடியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புழங்கு பொருட்களைச்…