தொல் தமிழ்க் குறவர் பழங்குடியினரின் உன்னதமான பண்பாட்டு, ஆன்மிக வரலாறும் அவர்க்கு இழைக்கப் பட்ட பிற்காலத்திய அநீதிகளும்
குறவர் இனம் குறித்து முழுமையாக எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. குறவர் யார் ? யார் என்பதற்கு முன், யார் இல்லை என்பதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரிய வாகிரி போலி மொழி பேசிக் கொண்டு, ஊசிமணி, பாசிமணி விற்கும் நரிக்குறவர் என அழைத்துக் கொள்ளும் குருவிக்காரர்கள் வேறு, தொல் தமிழ்க் குறவர் வேறு. ஒரு காலத்தில் இலங்கை தாண்டி நீண்டிருந்த தென்னிந்திய மலைகளில் ( இந்தியா, இலங்கை இரண்டும் ஒரே நிலமாக இருந்த காலகட்டத்தில்…