நாஞ்சில் நாடன் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள்
சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டறியும் நுட்பமும் அதை அலசி ஆராயும் ஆற்றலும் படைப்பாளர்களுக்கு அவசியமானது என்பர். சமுதாய உணர்வுகள் இன்றி எந்த ஒரு படைப்பாளளும் தன்னைப் படைப்பாளனாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. ஒரு படைப்பாளன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் சமூக மாற்றங்களை தன் உள்ளத்தில் பதிவு செய்து அதனை சிறந்த படைப்பாக வெளிப்படுத்துகின்றான். இதனை இன்றைய தற்காலப் படைப்பாளர்கள் சிறப்புடன் செய்துவருகின்றனர். அந்தவகையில் நாஞ்சில் நாடன் தன்னுடைய படைப்புகளில் சமூகத்திற்குத் தேவையான மாற்றங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாகப்…