சோ தர்மனின் சூல் நாவல் குறிப்பிடும் வேளாண் பண்பாட்டுக் கூறுகள்

ஒவ்வொரு தாவரத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியது விதை . அந்த விதை என்பதனை வித்து அல்லது ‘ காழ்’ என்று அழைப்பார்கள் . விதைகள் விவசாயத்திற்கும் தாவரத்திற்கும் மட்டுமல்ல தனிமனித உடல் நலத்தை பேணி காக்கக்கூடியது . விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நாம் விதைக்கக்கூடிய விதைகள் பொறுத்து பயிர்கள் முளைக்கும் தன்மை பெற்றிருக்கும் . வாழ்விலும் அதே போன்று தான் நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு தகுந்த விளைவுகள் நமக்கு வந்து சேரும். அது வினையாக இருந்தாலும்…

சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை

சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம்…

கள்ளிக்காட்டின் வாழ்வியல் பதிவுகள்

ஒரு சமூகத்தின் உண்மையான வரலாறு, மண்ணின் மணம் கமழும் இடத்தில்தான் வேரூன்றிக் கிடக்கிறது.அந்த வகையில், கள்ளிக்காட்டின் வாழ்வியல் பதிவுகள் என்பது ஒருநிலப்பரப்பின் வரலாற்றை மட்டும் பதிவு செய்வதன்று. அந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உணவு, மருத்துவம், திருமணம், தொழில், மக்கள் மண்மீது கொண்ட பற்று, இறப்பு என அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு துடிப்பையும் பதிவு செய்யும் பண்பாட்டு ஆவணமாகத் திகழ்கிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம். நாகரீக அறிவியல் வளர்ச்சியில் மறைந்து போன கள்ளிக்காட்டு மக்களின்…

Women, Nature and Resistance in The Everest Hotel and The Hungry Tide

The unequal relationship between human society and the natural environment has raised important questions about gender, power, and exploitation. While women continue to face gender-based inequalities in many societies, nature is often treated as a resource for human use. Eco-feminism draws attention to these shared patterns of domination and examines the relationship between women and…

இராசிபுரம் வட்ட சிறுதெய்வங்களின் கோயில் அமைப்பும் வழிபாடும்

அச்சத்தின் காரணமாக தோன்றியவையே தெய்வ வழிபாடாகும். அன்றிலிருந்து இன்றுவரை ‘நம்பிக்கை’ என்ற ஒற்றை சொல்லில் அனைவரின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது என்றால் மிகையாகாது. அதற்கு முதலும் முடிவுமாக இருப்பவர் ‘கடவுள்’. உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகம் தோன்றி வளர்வதற்கு முன்பே, பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம் நம் தமிழினம் என்று வரலாறுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. இவர்களின் வாழ்க்கையில் ஒன்றியிருக்கும் இறை வழிபாடே தமிழர்களின் தலையாய வழிபாடாகும். இயற்கையை வழிபட்டு வணங்கிய மனிதன், நாளடைவில் தம் முன்னோர்களையும் வழிபடத்…

கன்னியாகுமரி மாவட்ட காணிக்காரர்கள் வழிபாட்டு முறைகள்

மனித இனம் ஐம்பூதங்களின் அற்புதங்களைக் கண்டு வியந்து அவற்றை வணங்கத் தொடங்கியமையே கடவுள் நம்பிக்கையின் தொடக்கமாகும். இயற்கையின்பால் கொண்டுள்ள அச்சமே மக்கள் சமுதாயத்தைக் கடவுள் நம்பிக்கைக்குக் கொண்டு சென்றதென்பது மானிடவியலாரின் கருத்து. நிலம் மற்றும் வாழும் இருப்பதை வைத்தே அவர்களின் நம்பிக்கை வழியாகக் மக்களிடையே நிகழ்த்தும் செயல்பாடுகள் கடவுளைக் காணமுடிகின்றது. இது அவர்கள் வாழ்கின்ற நிலப்பகுதியின் சூழ்நிலையின் காரணமாகவும், அது பயத்தின் விளைவாகவும் இருக்கலாம். இதனை, “இயற்கையின் சக்திகளைக் கண்டு அச்சமடைந்த மனிதன் அவற்றில் உயிர்ப்பு இருப்பதாக…

அ.மாதவையாவின் விஜய மார்த்தாண்டம் நாவலில் நாட்டுப்புறக்கூறுகள்

தமிழ் நாவல் இலக்கியத்தின் தொடக்க கால வளர்ச்சியில் அ.மாதவையாவிற்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூக சீர்திருத்த நோக்கத்தையும் நடப்பியல் பார்வையையும் அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கிய மாதவையா, தமது நாவல்களில் நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக விஜயமார்த்தாண்டம் என்ற நாவல் மறவர் சமூகத்தின் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தி அமைந்துள்ளதால் அச்சமூகத்தின் பேச்சு வழக்கு, பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டு, ஆண்டிப்பாட்டு, தர்க்கப்பாட்டு போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கூறுகள் நாவலுக்குள் இடம்பெறுகின்றன. நாவலின் கதையமைப்பு, சமூகப்…

ம.காமுத்துரையின் கலவை நாவலில் வட்டார வழக்காறுகளும் பண்பாட்டுப் பதிவுகளும்

நாவல் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் வட்டார நாவல் என்ற பிரிவு மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் தனித்துவமான மொழிநடையுடன் அப்படியே பிரதிபலிப்பது வட்டார இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும். ம.காமுத்துரையின் கலவை நாவலானது மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்த தென் மாவட்டமான தேனி வட்டார மக்களின் வாழ்வியல் சூழலைப் பல்வேறு பரிமாணங்களில் பதிவு செய்யும் படைப்பாக அமைகிறது. குறிப்பாக வட்டார மக்களின் பேச்சுமொழி, சொலவடைகள், பழமொழிகள், நம்பிக்கைகள், சடங்குகள், தொழில்…

Identity and Human Relationships: A Study of Anita Nair’s Lessons in Forgetting and Preeti Shenoy’s Wake Up, Life is Calling

This study focuses on the interplay between identity and human relationships in Anita Nair’s Lessons in Forgetting and Preeti Shenoy’s Wake Up, Life is Calling. Both novelists explore how women navigate personal struggles, emotional challenges, societal expectations, and evolving relationships in contemporary Indian society. The two contemporary Indian women writers explore different aspects of human…

சோ தர்மனின் சூல் நாவல் கூறும் ‘கிராம வாழ்வியல்’

சோ தர்மன் ஐயா படைத்த சூல் நாவலில் பண்பாட்டுக் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கிறது .வேளாண் தொழிலில் விதை பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளது .கடலை விதை ,வற்றல் விதை , பருத்திவிதை மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் உரம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது