Leadership Development and NCC Training as Predictors of Defence Career Competencies among NCC Cadets: A Study in Coimbatore District

The National Cadet Corps (NCC) is the world’s largest youth organization that has a military-style structure and one of its core objectives is to prepare young people for future national service or defence careers. Although there are some studies examining the relationship between leadership, training experience with respect to the NCC, and whether those experiences…

நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள்

ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள்…

தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் விளிம்புநிலை இஸ்லாமியர்களின் வாழ்வியல்

தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த பன்மை அடையாளங்களின் தொகுப்பிற்கு நல்ல உதாரணங்களாக அமைவனவாகும். தமிழ்ச் சூழலமைவில் வாழ்வின் பரப்பிற்குள் முஸ்லீம் மைய நீரோட்டத்தில் கலவாத விளிம்புநிலை மூஸ்லீம்கள் பலர் உள்ளனர். ஒசாக்கள் என்ற நாவிதர்கள், வண்ணார், மீன் பிடிப்போர், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழில் செய்வோர், நெசவு, பாய்த்தொழில் செய்வோர், கபறுகுழி தோண்டுபவர்கள், கசாப்புக்கடை வியாபாரம் செய்பவர்கள், இரும்பு பட்டறைத் தொழிலாளர்கள், குடியிருப்பின்றி அலைந்து திரிகின்ற நாடோடிகள், அடித்தட்டு வாழ்க்கை வாழும்…

கி.ராஜநாராயணன் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல்

கி.ராஜநாராயணன் சிறுகதைகளான கதவு மாயமான்,ஒரு செய்தி, கரண்டு, ஆகிய சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி இவ்வாய்வு ஆராய்ந்துள்ளது கி ராஜநாராயணன் தனது கரிசல் மண் கதைகளில் சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் வறுமை உழைப்பு சுரண்டல் சமூகப் புறக்கணிப்பு மற்றும் அவர்களின் மனிதநேயத்தை இயல்பாக தமது சிறுகதைகளில் பதிவு செய்துள்ளார் வறுமையின் காரணமாக சொந்தமாக ஒரு கதவு கூட இல்லாத ஏழை மக்களினுடைய நிலை மக்களை ஏமாற்றி பிழைக்கும் போலித்தனங்களும் அதற்கு…

குமரி மாவட்ட நாடார்களும் பண்பாட்டு ஒடுக்குமுறையும் (பொன்னீலனின் பிச்சிப் பூ நாவலை முன்வைத்து)

பிச்சிப் பூ நாவல் குமரி மாவட்ட நாடார்கள் பற்றிய ஒரு சமூக ஆவணமாக விளங்குகிறது. சிறப்பாக குமரி மாவட்ட நாடார்கள் ஆதிக்க, அதிகார வர்க்கத்தினரால் எதிர்கொண்ட பண்பாட்டு ஒடுக்கு முறையையும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இக்கட்டுரை கவனத்தில் கொள்கிறது. தமிழகத்திலே சாதிய ஒடுக்கு முறைக்கானச் சிந்தனைகள் பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகே தொடங்குகிறது. பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகு ஆதிக்க சாதியினர் அடித்தள மக்களை ஒடுக்குவோராக விளங்கினாலும் அந்த ஒடுக்குமுறை காவல்துறை, இராணுவம் போன்ற அரசின்…

Cultural Imprints in Vallikannan’s Literary Works

This study examines the representation and preservation of cultural practices in the literary works of Vallikannan, with particular emphasis on the ways in which his narratives document the lived experiences of Tamil society. The study seeks to identify, classify, and interpret the cultural elements embedded in his writings and to examine their relationship with changing…

தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்

தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு ஆய்வுகளிலும் நாட்டார் தெய்வங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதை வெளி உலகிற்கு பறைசாற்றியவர் தொ.ப என்ற இரண்டு எழுத்திற்குச் சொந்தக்காரரான தொ.பரமசிவன். வரலாறுகளை மக்களின் கண்ணோட்டத்தில் எழுதிய மகத்தான மனிதர். திராவிடப் பண்பாட்டை தென்னிந்தியாவின் பொதுமையான பழக்கவழக்கங்களை எளிமையாக எடுத்துச் சொன்னவர். இவரை பண்பாட்டுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர் எழுதியது 20 புத்தகங்கள் அல்ல. 2000 ஆண்டு தமிழர் வாழ்வை. பேராசிரியர்கள் பலர் சோழர் வரலாற்றைத் தேடினார்கள்.…

தென் தமிழகத்தில் அந்தோணியார் வழிபாடும் பண்பாட்டுப் பதிவுகளும்

சமயங்கள் என்பவை மனித சமூகத்தைச் செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். அவ்வகையில் யூத மதத்திலிருந்து தோன்றிய ஒரு புதிய மார்க்கமே கிறிஸ்தவம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின் தோன்றிய இம்மதம் காலப்போக்கில் உலக அளவில் பெரும் வளர்ச்சி அடைந்தது. மேலைநாட்டினர் வாணிப நோக்கத்திற்காக தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். இங்கு வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் எளிய நிலையையும் கண்ட அவர்களிள் சிலர் இம்மக்களுக்கு ஆன்மீக சமயப் பணிகளோடு சமூக நலப்பணிகளையும் ஆற்றத்தொடங்கினர். மக்களுக்கு தேவையான மருத்துவம்…

தொ. மு. சி. ரகுநாதனின் “பாரதி காலமும் கருத்தும்” நூலில் இடம்பெற்றுள்ள முற்போக்கு சிந்தனைகள்

தொ. மு.சிதம்பர ரகுநாதன் தமிழின் முன்னோடி எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை நாவல் கவிதை நாடகம் என பல படைப்புகளை படைத்துள்ளார். திருச்சிற்றம்பல கவிராயர் என்ற புனைப் பெயரிலும் கவிதை எழுதியுள்ளார். இவரது பஞ்சும் பசியும் என்ற நாவல் நெசவாளர்களின் துயர வாழ்வை பேசும் நாவலாகும். இது செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது அயல் மொழியில் அதிக அளவு விற்பனையான முதல் தமிழ் நாவல் இந்நாவல் ஆகும் இவர் எழுதிய பாரதி காலமும் கருத்தும் என்ற நூல் முற்போக்கு…

சிறுதெய்வ வழிபாடும்.. தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையும்

இவ்வாய்வுக் கட்டுரை, தென் மாவட்ட மக்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ள சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும், அவற்றின் வரலாற்று, சமூக, பண்பாட்டு முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. சிறுதெய்வ வழிபாடு என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், இயற்கை சார்ந்த வாழ்வியல், முன்னோர் வழிபாடு, வீரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக விளங்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து வேறுபட்ட சடங்குகள், வழிபாட்டு முறைகள் மற்றும் நாட்டார் மரபுகளைக் கொண்டுள்ள இவ்வழிபாடு, தென் மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சமூக உறவுகளிலும் குறிப்பிடத்தக்க…