Tiruvannamalai district, located in the northern part of Tamil Nadu, is a landscape with an immense historical background both archaeologically and culturally. Specifically, Periyakolappadi village in Chengam Taluk falls under the ancient territory ruled by the Sangam-era chieftain Nannan Sei Nannan and serves as a literal storehouse of Pallava-era hero stones (Nadu-kal).
This research paper provides a detailed archaeological analysis of:
- The etymology of the name "Periyakolappadi."
- Geographical landmarks mentioned in the Sangam literary work Malaipadukadam.
- Hero stones dating back to the reigns of Pallava kings Mahendravarman, Eswaravarman, and Nandivarman.
- Unique local rock names characteristic of the region.
Furthermore, the study uses statistical data to explain the continuity of agriculture from the Sangam period to the present, as well as modern economic shifts like the impact of flower cultivation. Highlighting how natural resources and historical monuments are facing destruction due to commercial encroachment, this research emphasizes the urgent need for their preservation.
தமிழகத்தின் வடபகுதியில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், தொல்லியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் அளப்பரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு நிலப்பரப்பாகும். குறிப்பாக, செங்கம் வட்டத்தில் அமைந்துள்ள பெரியகோளாப்பாடி கிராமம், சங்க காலத் தலைவன் நன்னன் சேய் நன்னனின் ஆட்சிப் புலத்திற்கு உட்பட்ட பகுதியாகவும், பல்லவர் காலத்து நடுகற்களின் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இவ்வாய்வறிக்கை, பெரியகோளாப்பாடியின் ஊர்ப்பெயர் தோற்றம், சங்க இலக்கியமான மலைபடுகடாம் குறிப்பிடும் புவியியல் அடையாளங்கள், பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன், ஈஸ்வரவர்மன் மற்றும் நந்திவர்மன் காலத்து நடுகற்கள், மற்றும் இப்பகுதியின் தனித்துவமான பாறைப் பெயர்கள் ஆகியவற்றைத் தொல்லியல் நோக்கில் விரிவாக ஆராய்கிறது. மேலும், சங்க காலம் முதல் இன்று வரை இப்பகுதியில் தொடர்ந்து வரும் உழவுத் தொழில் மற்றும் தற்காலப் பொருளாதார மாற்றமான மலர்ச் சாகுபடியின் தாக்கம் குறித்தும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகளால் அழியும் நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

