Vol. 12 No. 05 (2026)

தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு

Dr.KAVITHA N.M1, Dr. MOGANAMBIKA K. P.2, VALARMATHI V. P3

  1. Assistant professor, Tamil Department, Vellalar College For Women(Autonomous), Thindal, Erode., India
  2. Assistant professor, Department of Tamil Vellalar college for womem (Autonomous ), Thindal. Erode., India
  3. Assistant Professor, Department of Tamil Vellalar college for women (Autonomous ), Thindal. Erode., India

Abstract

தமிழ் இலக்கியத்தில் ‘எழுபிறப்பு’ (எழுமை) என்னும் சொல்லாட்சி அறம், வினைப்பயன், மறுபிறப்பு நம்பிக்கை ஆகிய கருத்துகளோடும், ‘ஏழு’ என்னும் எண்ணுக்குரிய பண்பாட்டுக் குறியீட்டு மதிப்போடும் நெருங்கிய தொடர்புடையதாக விளங்குகிறது. இச்சொல்லாட்சி வெளிப்படையாகபல   திருக்குறள்களில் இடம்பெறுகிறது. அக்குறள்களை மையமாகக் கொண்டு சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பக்தி இலக்கியம் ஆகியவற்றில் இடம்பெறும் தொடர்புடைய பதிவுகளுடன் ஒப்பிட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. பனுவல் பகுப்பாய்வு, ஒப்பீட்டு வாசிப்பு, குறியீட்டியல் ஆகிய அணுகுமுறைகளின் வழி ‘எழுமை’ என்னும் சொல்லாட்சியின் பொருண்மை மற்றும் பண்பாட்டுப் பின்னணி ஆராயப்படுகிறது. ‘ஒருமை–எழுமை’ என்னும் இணைமுரண் வழியாக வள்ளுவர் அறத்தின் பயனை ஒரு பிறவிக்குள் மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியான பிறவிகளுக்கும் தலைமுறைகளுக்கும் விரிவுபடுத்துகிறார். அதேவேளை, ஊழையும் முயற்சியையும் இணைத்துப் பேசுவதன் மூலம் அறத்தை வெறும் பயன்நோக்குச் செயலாகச் சுருக்காமல் நிலைநிறுத்துகிறார் என்பதும் புலப்படுகிறது. மேலும், ‘எழுமை’ என்பது எண்ணியல் அடிப்படையில் ஏழு பிறவிகளை மட்டும் குறிப்பதன்று. முழுமை, தொடர்ச்சி, பெருக்கம் ஆகிய பண்பாட்டுப் பொருண்மைகளை உணர்த்தும் எண்–மரபுச் சொல்லாட்சியாகவும் இயங்குகிறது என்ற கருதுகோள் இவ்வாய்வின் வழி முன்வைக்கப்படுகிறது.

Keywords

  • Ezhu Pirappu
  • Ezhumai
  • எழுபிறப்பு
  • வினைப்பயன்
  • மறுபிறப்பு

How to cite

APA 7 Dr.KAVITHA N.M, Dr. MOGANAMBIKA K. P., & VALARMATHI V. P (2026). தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு. , 12(05), 11-38. https://doi.org/10.63300/tm12052026.02

MLA 9 Dr.KAVITHA N.M, et al. “தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு.” , vol. 12, no. 05, 2026, pp. 11-38, https://doi.org/10.63300/tm12052026.02.

Chicago Dr.KAVITHA N.M, Dr. MOGANAMBIKA K. P., and VALARMATHI V. P. “தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு.” 12, no. 05 (2026): 11-38. https://doi.org/10.63300/tm12052026.02.

Harvard Dr.KAVITHA N.M, Dr. MOGANAMBIKA K. P. and VALARMATHI V. P (2026) ‘தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு’, , 12(05), pp. 11-38. doi:10.63300/tm12052026.02.

IEEE Dr.KAVITHA N.M, Dr. MOGANAMBIKA K. P., and VALARMATHI V. P, “தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு,” , vol. 12, no. 05, pp. 11–38, 2026, doi: 10.63300/tm12052026.02.

Vancouver Dr.KAVITHA N.M, Dr. MOGANAMBIKA K. P., VALARMATHI V. P. தமிழ் இலக்கிய மரபில் 'எழுபிறப்பு' சிந்தனை: அறம், வினைப்பயன், மறுபிறப்பு மற்றும் எண் குறியீட்டியல் சார்ந்த ஆய்வு. . 2026;12(05):11-38. doi:10.63300/tm12052026.02

Download RISDownload BibTeX

References 4

  1. குறளில் 'எழுமை/எழுபிறப்பு' என்னும் சொல்லாட்சி அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் இடம்பெற்று, நன்மையின் காப்பையும் தீமையின் அழுந்துதலையும் பிறவிகளுக்கு நீட்டும் அறவியல் சொல்லாடலாக அமைகிறது.
  2. 2. 'ஒருமை--எழுமை' இணைமுரண் செயலை இப்பிறவிக்கு உரியதாகவும் பயனைத் தொடர்ச்சிக்கு உரியதாகவும் வகுக்கிறது; ஊழையும் முயற்சியையும் சமநிலைப்படுத்தும் குறளின் நிலைப்பாடு இதை வெறும் விதிக்கணக்காகிவிடாமல் காக்கிறது.
  3. 3. சிலப்பதிகாரம் ஊழ்வினையைக் கதையியல் நீதியாகவும், மணிமேகலை பிறவி அறுத்தலை இலக்காகவும் முன்வைக்கும் நிலையில், குறள் இவ்விரு நோக்குகளையும் (எழுமையும் பிறவிப் பெருங்கடலும்) ஒரே நூலுக்குள் இணைக்கிறது.
  4. 4. 'எழுமை' என்பது பிறவிகளின் துல்லியக் கணக்கு அன்று; 'ஒன்று'க்கு எதிரான முழுமையை உணர்த்தும் பண்பாட்டு எண்-மரபுத்தொடர் என்ற வாசிப்பைப் பனுவலின் உள்சான்றுகள் ஆதரிக்கின்றன.

Share